கவிதை முற்றம்

"அகலிகை" - மஹாகவி.து.உருத்திரமூர்த்தி

  இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அழிவா ரத்தே. சந்தனம் கமழும் மார்புச் சால்வையிற், சரிகை மீதில் பிந்திவந் தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந் நிலவு பட்டுச் சிந்திற்று, மிரண்டங்கே ஓர் சிள்வண்டு வாய் மூடிற்றாம்.  ...

மேலும் படிப்பதற்கு

புள்ளி அளவில் ஒரு பூச்சி - மஹாகவி. து. உருத்திரமூர்த்தி

புத்தகமும் நானும், புலவன் எவனோதான் செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல மனம் ஒத்திருந்த வேளை! ஓழுங்காக அச்சடித்த வெள்ளைத் தாள் மீதில், வரியின் முடிவினிலே, பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற் புள்ளியைக் கண்டு புறங்கையால் தட்டினேன். நீ இறந்த...

மேலும் படிப்பதற்கு

மீண்டும் தொடங்கும் மிடுக்கு - மஹாகவி து.உருத்திரமூர்த்தி

மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் ந...

மேலும் படிப்பதற்கு

'தேரும் திங்களும்' -மஹாகவி து. உருத்திரமூர்த்தி-

  மஹாகவி து. உருத்திரமூர்த்தி ✠ ✠ ✠ நமது ஈழத்தில் வீரியமிக்க கவிஞர் பலர் வாழ்ந்துள்ளனர். ஈழத்தின் இலக்கிய ஆக்கங்களுக்கு, உலகமேடைகளில் அதிகம் இடம் கிடைப்பதில்லை. அதனால் நம் இலக்கிய வலிமைகள் பெரும்பாலும் வெளிவரவில...

மேலும் படிப்பதற்கு

இரா – பகல் - கவிஞர் ச.முகுந்தன்

  அன்றாடம் எங்கள் அலைமடியில் எழும்கதிரோன் பின்னேரக்கையில் பிடிபடுவான் பின் நடக்கும் இரவு விசாரணையின் இம்சையினைத் தாங்காமல் நிலவை மலங்கழிப்பான் இந்நெடி கண்டு விண் ஈக்கள் பலகூடி மொய்க்கும் பயங்கர ராத்திரிகள் ◐◐◐ விளக்குத் தலையோடு வ...

மேலும் படிப்பதற்கு

வாருங்கள் சேருங்கள் தேருங்கள் - ஸ்ரீ. பிரசாந்தன்

களம்;: வரணி கதாமாந்தர்: அடியவர், அம்பிகை அடியவர்: பேர்புகழ் ஒன்றும் வேண்டிய தில்லைப் பெருமகளே! ஓர்குவைப் பொன்பொருள் உன்னிடம் நாமென்றுங் கேட்டதிலை பார் வியக்கின்ற பதவியோ வீடோ பகர்ந்தறியோம் தேர் வடம் பற்ற அருள்தருவாய் எங்கள் திருமகளே! கூ...

மேலும் படிப்பதற்கு

மறதி இனிது - வ.வடிவழகையன்

  மறதியொரு நோயென்று மருந்தெடுக்க முயல்வோரே மறதியொரு பிணியன்று மறதியொரு பிழையன்று மறதியொரு கறையன்று மறதியொரு குறையன்று மறதியொரு வரமாகும் மறதியது இனிதாகும். நடந்ததையே நினைந்திருக்க நாளும் பொழுதுமது மடங்குகளாய் பெருகி தினம் மனத்திடையே குட...

மேலும் படிப்பதற்கு

பின்னைப் புதுமை -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    மதச்சண்டை💧 கடவுள்களைக்  காக்கப் புறப்படும் மனிதர்களின் மடமைச்  செயற்பாடு.     கற்பு💧 தாவும் மனம்  தளர்ந்த அறிவு  கொதிக்கும் உடல்  குமுறும் உணர்வு ...

மேலும் படிப்பதற்கு

நான், இனி நாத்திகன் -ஸ்ரீ. பிரசாந்தன்

  கருணைகொண்ட அக்கடவுள் பேரிலா கரத்தில் ஆயுதம் தாங்கிக் கொள்வது? சிறுவர்மீதுதாம் மோதிக் கொல்வது?  சிறந்த உடல்களைச் சிதறச் செய்வது?  அருவருத்திடும் இழிய செயல்களை அப்பன் ஆனவன் எப்படி ஏற்கிறான்? முறுவலித் தருள் சுரக்...

மேலும் படிப்பதற்கு

தொல்லை தரும் காதல் துணி -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

  உள்ளம் குளிரும் உயிர் துள்ளி மேல் எழும்பும் கள்ளமிலா நெஞ்சில் கரவு வரும் - வெள்ளமென அன்பு பெருகி அகம் நிறைக்கும் அஃதெல்லாம் கண் கலந்த காதற்(கு) அணி.     ஓயாமல் உள்ளே உணர்வெல்லாம் உருண்டுவரும் தீயாக நம் உ...

மேலும் படிப்பதற்கு

காலம் மாற்றிய கணக்குகள் -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  கற்பு பதின்மூன்றில் விரிந்த அப்பருவமலர். திகட்டத்திகட்ட, தினம் தினமும் தேன் துளிர்த்து, மகரந்தச்சேர்க்கைக்காய் மயங்கிற்று. தேன் குடிக்க வண்டழைக்க, அப்பருவமலருக்குப் பல தடைகள். பதினெட்டைத் தாண்டு என அரசதடை, இருபத்திநான்கு என கல்வி...

மேலும் படிப்பதற்கு

இலங்கை 04/21 - ஸ்ரீ. பிரசாந்தன்

  உள்ளூர்ப் போட்டி முடிந்த மைதானத்தில்        உலகப் போட்டி தொடங்கிவிட்டதா? கிள்ளுக் கீரையா எங்க ளுயிர்கள்       கேட்பதற்கிங்கு யாருமில்லையா? புல்லுக் கட்டுள் பாம்பு கிடப்பதைப்        ...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2025 - உகரம் - All rights reserved.